காமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்

விளம்பரங்கள்

DelhiCommonweathgames

ரூ 8000 கோடி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் எம்எஸ்கில் மற்றும் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்யவில்லை என சில மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீது கோபத்தில் உள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். இதனை அவர் வெளிப்படையாகவே காட்டியுள்ளார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளது பல அமைச்சர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி பாராளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றப்படும் என்று தெரியவந்துள்ளது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பெரும் அலட்சியம் காட்டியதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மீது பிரதமர் மன்மோகன்சிங் கோபத்தில் உள்ளார். அதுபோல போட்டி ஏற்பாடுகளை விரைந்து செய்ய உதவவில்லை என்று ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி மீதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மேலும் காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை ரூ 8000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. முழு விவரமும் வெளியாகும்போது வேலும் சிலரது தலைகளும் உருளலாம் என்று தெரிகிறது.

அவர்கள் பதவி பறிக்கப்படலாம் அல்லது அவர்கள் இருவரும் வேறு இலாகாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: