திரையுலகம் ஒரு நடிகை… மூன்று பேர்…ஐந்து நாட்கள்…போச்சே..

ஒரு நடிகை… மூன்று பேர்…ஐந்து நாட்கள்…போச்சே..

நடிகை ஒருவருக்கு மேனேஜர் அவர். புதுமுகம் என்றாலும் புன்னகை சிந்தும் ஃபேஸ்கட். பூவை கொட்டி வைத்த மாதிரி பேஸ்மென்ட் என்று அழகு சுரங்கம் அந்த நடிகை. நன்றாகவும் படித்திருந்தார். ‘நடிப்பு லட்சியம். கிடைக்கலேன்னா வேலை நிச்சயம்’ என்கிற கொள்கையோடுதான் உள்ளே வந்திருக்கிறார். மெத்தப் படித்தவர் என்பதால் மேனேஜருக்கும் இவர் மேல் மதிப்பு ஜாஸ்தி.

வாய்ப்பு வரும். கூடவே சில கண்டிஷன்களும் போடுவார்கள். அவரு ரொம்ப படிச்சவரு. அவரை போயி எப்படி? என்று ‘அந்த விஷயத்தை’ நடிகை காதில் போடாமலே வேறு வாய்ப்புகளை தேடி வந்தார் மேனேஜர். அப்படி ஒரு முறை தேடும்போது வந்தவர்தான் ஒரு என்ஆர்ஐ தயாரிப்பாளர். சந்தித்தார்கள் இருவரும். போட்டோ கொடுத்தார் மேனேஜர். சம்பளம் பேசினார் தயாரிப்பாளர். கூட்டிக்கழித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். பதினைஞ்சு நாள் கால்ஷீட். மூன்று லட்சம் சம்பளம். கைகுலுக்கி கிளம்பும்போது என்ஆர்ஐ சொன்னார். “சார் ஒரு கண்டிஷன்…. நாங்க மூணு பேரு சேர்ந்துதான் இந்த படத்தை தயாரிக்கிறோம். அதனால் ஹீரோயின் எங்க மூணு பேருக்கும் அஞ்சஞ்சு நாளு ஒதுக்கணும்…”

அவ்வளவுதான். வெறுத்துப்போன மேனேஜர், ‘அவங்க ரொம்ப படிச்சவங்க’ டயலாக்கை அங்கேயும் அவிழ்த்துவிட்டுவிட்டு சாரிங்க என்று எழுந்து கொண்டார். அடக்க மாட்டாமல் ஒரு நாள் இந்த வேதனையை நடிகையிடம் சொன்னாராம். அதற்கு நடிகை சொன்ன பதில்தான் பயங்கர அதிர்ச்சி. “அதுக்கு பிறகு அந்த பொண்ணை நான் பார்க்கவே இல்ல. நம்பர கூட டெலிட் பண்ணிட்டேன்” என்றார் மேனேஜர். அப்படி என்ன சொன்னுச்சாம் அந்த பொண்ணு?

“வாட் சார்… ஒன்லி த்ரி மெம்பர்ஸ். சமாளிச்சிருக்கலாமே. த்ரி லேக்ஸ் மிஸ்சாயிருச்சே!”

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி