அரசியல் இலங்கை அரசை கண்டித்து அஞ்சல் அட்டை பிரசாரம் : சர்வதேச மன்னிப்புச் சபை அறிவிப்பு

இலங்கை அரசை கண்டித்து அஞ்சல் அட்டை பிரசாரம் : சர்வதேச மன்னிப்புச் சபை அறிவிப்பு

amnesty

திரிகோணமலையில் 5 தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்த ராணுவ வீரர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்காத இலங்கை அரசை கண்டித்து அஞ்சல் அட்டை பிரசாரம் நடத்தவிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

திரிகோணமலையில் 5 தமிழ் மாணவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது. இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

ஆனால் மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் வகையில் பிரச்சாரம் நடத்த மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையின் மனித உரிமை மீறல் போக்கை உலகறியச் செய்யும் முயற்சியாக அஞ்சல் அட்டைப் பிரசாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மெக்டொனால்ட் தெரிவி்த்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி