ஒரு வழியா கமல் இணைந்துவிட்டார்…

விளம்பரங்கள்

kamal

பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. நல்ல செய்தி. வாழ்த்துக்கள் என்று ஃபார்மலாக வாழ்த்திவிட்டு அடுத்த செய்திக்கு தாவும் எண்ணமிருப்பவர்கள் ஒரு நிமிஷம் ப்ளீஸ். பூமிக்கு வந்த புது வசந்தத்தை வாழ்த்த வந்தவர்கள் லிஸ்ட்டில் முதலில் இருந்தவர் யார் என்பதுதான் பெரிதும் கவனிக்க வேண்டிய செய்தி.

தசாவதாரம் படத்தின் போது கமலுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் செமத்தியான முட்டல் மோதல். அப்படத்தின் ரிலீஸ் தேதியை கூட கமலுக்கு சொல்லவில்லையாம் ரவி. அதுமட்டுமல்ல, படத்தின் நாயகனுக்கு ஸ்பெஷல் ஷோ போடவில்லை என்பதெல்லாம் அரத பழசான செய்தி. அப்படியெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இன்று ஒரு இலையும் இரு இட்லியுமாக இருப்பதுதான் ஆச்சர்யம்.

ரவிச்சந்திரனின் மனைவி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததும் முதலில் ஓடோடி சென்றது கமல்தானாம். குழந்தை பிறப்பதற்கு முன்பே அங்கு சென்றுவிட்டதாகவும் கூறுகிறார்கள். முதல் வாழ்த்தையும் குழந்தையின் காதருகே சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார் கமல். இதையடுத்து இருவரும் சேர்ந்து படம் தருவார்களோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது கோடம்பாக்கத்தில்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: