அரசியல் விடுதலைப் புலிகள் வேறு வழியில் போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சி…

விடுதலைப் புலிகள் வேறு வழியில் போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சி…

gotabhaya

சட்டவிரோதமாக புகலிடம் கோருவோர் விடயத்தில் அவுஸ்திரேலிய கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ‘தி அவுஸ்திரேலியன்’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ‘புகலிடம் கோருவோரின் படகுகள் இலங்கையிலிருந்து புறப்படுவதை கடற்படையினரும் பொலிஸாரும் தடுத்துள்ளனர். அரசியல் புகலிடம் கோருவோர் இங்கு (இலங்கை) இருந்து அண்மைக் காலத்தில் படகுமூலம் சென்ற ஒரு தனிச்சம்பவம்கூட இடம்பெறவில்லை’ எனக் கூறியுள்ளார்.

மாறாக, மூன்றாவது நாடொன்றுக்குப் விமானம் மூலம் பயணம் செய்து, அங்கிருந்தே அவர்கள் புறப்படுகிறார்கள் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறியுள்ளார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டபின்னர் தமிழ் மக்கள் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோருவதற்கு காரணம் எதுவுமில்லை. அச்சம் காரணமாக இலங்கையைவிட்டு எவரும் வெளியேறுவதற்கான காரணம் இல்லை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வசிப்பதற்கு சுதந்திரம் உள்ளது.

எவருக்கேனும் புகலிடம்  வழங்கும்போது அவுஸ்திரேலிய அரசாங்கம் மிகக் கண்டிப்பாக நடந்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் சில குழுக்கள் வேறு வகையில் போராட்டத்தை ஆரம்பிக்க முற்படுவதகாவும் பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் வெளிநாடுகளில் அணிதிரளக்கூடும். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம்  இவ்விடயத்தில் தனது புலனாய்வுத்துறைகளை ஈடுபடுத்துவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி