அரசியல் இலங்கை இராணுவத்தின் படுகொலை குறித்து மன்னிப்புச் சபை பிரச்சாரம்

இலங்கை இராணுவத்தின் படுகொலை குறித்து மன்னிப்புச் சபை பிரச்சாரம்

amnesty

இலங்கை இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை இறங்கியுள்ளது.

திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்து வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

ஆனால் இம்மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையுமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இதை உதாரணமாகக் கொண்டு இலங்கையின் போக்கை உலகறியச் செய்வதற்கான அஞ்சல் அட்டைப் பிரச்சாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மக்டொனால்ட் கூறினார்.

இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இப்பிரச்சாரம் நடக்கவுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி