குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி

விளம்பரங்கள்

jayalalitha_karunanidhi

தமிழ் சினிமா ஹீரோக்களை ஜீரோக்களாக்கவும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்கவும் முயல்கிறார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.

மதுரையில் திங்கள்கிழமை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் சினிமா ஆதிக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார் அதிமுக பொதுச் செயலாளர்.

அவர் பேசுகையில், “தமிழ் சினிமா வையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார் கருணாநிதி. இவருக்கு எதிராக எந்த ஹீரோவாவது பேசினால் உடனே அவர்களை வீட்டுக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். முன்னணி ஹீரோ ஒருவரை சமீபத்தில் அப்படித்தான் திட்டினார் கருணாநிதி. வீட்டுக்கு வரவைத்து அசிங்கமாகப் பேசி அனுப்பியுள்ளார்.

இன்னொரு முன்னணி ஹீரோ, இவரது குடும்பத்துக்கு இலவசமாகவே சினிமா நடித்துத்தர வேண்டும் என மிரட்டப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் என்னிடம் சொல்லிப் புலம்புகிறார்கள் அந்த ஹீரோக்கள்.

கருணாநி்தியின் நோக்கமே, ஹீரோக்களை ஜீரோக்களாக்குவதும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்குவதும்தான்.

இவரது குடும்பத்தில் உள்ள மகன்கள், பேரன்கள் எல்லோருமே சினிமாது துறையை ஆக்கிரமித்துள்ளனர்.

கருணாநிதி குடும்பத்தினர்தான் இந்த ஆண்டு அதிக படங்களைத் தயாரித்துள்ளனர் அல்லது வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு வெளியான 64 படங்களில் 35 படங்களை கருணாநிதி குடும்பமே தயாரித்துள்ளனர்.

இவர்கள் வாங்க மறுத்ததால் 40 படங்கள் கடந்த ஆண்டு வெளியாகவே இல்லையாம்.

நடிப்பு, தயாரிப்பு, கதை வசனம், இயக்கம் என சகலமும் கருணாநிதி குடும்பத்தினர் வசமே. ஆனால் கதை வசனத்தையெல்லாம் இவர்களுக்கு சொந்தமாக எழுதத் தெரியாது. யாரையாவது வைத்து எழுது, பணம் கொடுத்து தங்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள்.

கருணாநிதி கதை வசனம் எழுத ரூ 50 லட்சம் சம்பளமாம். இவர் கதை, வசனம் எழுதி அதை யார் பார்ப்பார்கள். கதை வசனம் என்று ஏதோ ஒரு குப்பையைக் கொடுப்பார். அதை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, இயக்குநர்கள் தலையெழுத்தே என தங்கள் சொந்த கதை வசனத்தை படமாக எடுக்கிறார்கள். அவர்களுக்கு இவரிடம் வேலை ஆக வேண்டும். அதற்காகத்தான் இந்த ரூ 50 லட்சம் சம்பளம்”, என்றார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: