நிர்வாண கப்பல் சுற்றுலாவுக்கு ஆட்கள் தேடும் நிறுவனம்

விளம்பரங்கள்

cruise ship

cruise ship

லண்டனைச் சேர்ந்த சுற்றுலா முகவர் நிறுவனமொன்று 07 நாட்கள் நிர்வாண கோலத்துடன் உல்லாசமாக கப்பல் பயணம் செய்வதற்கு 22 பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

கடல் ,ஆறு  போன்றவற்றில்  முதலாவது நிர்வாண கப்பல் பயணம்  2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறும் என ஈவாட்டர்வேய்ஸ் எனும் மேற்படி நிறுவனம் அறிவித்துள்ளது.

குரோஷியாவில் காதல் தீவு என்று வர்ணிக்கப்படும் ‘ரப்’ தீவு மற்றும் ஸடார் தீவுக்கும் இப்பயணம் மேற்கொள்ளப்படும். இதற்கான கட்டணம் 500 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குரோஷியாவில் பல நிர்வாண கடற்கரைகள் உள்ளன. அத்துடன் ‘இயற்கைத்துவ விடுமுறைகளும் பிரபலமானவை. இது பெரிய அனுபவமாக இருக்கும்’ என அந்நிறுவனத்தின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தாளர்.

பயணிகள்  நீந்தும் போதும் சூரியக்குளியல் செய்யும் போதும் ஆடைகளில்லாமல் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் உணவு நேரத்தில் அவர்கள் ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் பலர் இதில் பங்குபற்றுவர் என எதிபார்ப்பதாகவும் ஆனால் ஜேர்மனியர்கள் அதிகமாக இருப்பர் என எதிர்பார்க்கிறோம்.  ஏனென்றால் அவர்களிலேயே நிர்வாண விரும்பிகளான இயற்கைத்துவ வாதிகள் அதிகம் எனவும் அந்நிறுவம் கூறியுள்ளது.

தமது அதிகமான வாடிக்கையாளர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும்  அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: