அரசியல் ராகுல் காந்தி நாகரிகம் கற்க வேண்டும்…

ராகுல் காந்தி நாகரிகம் கற்க வேண்டும்…

sidhu

எவ்வாறு நாகரிகமாக நடக்க வேண்டும் என்பதை ராகுல் காந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்று ராகுல் காந்தி கூறியதற்கு பதிலளிக்கும் விதத்தில் சித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக சித்து, குஜராத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் ராஜ்கோட்டில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சித்து இது குறித்து மேலும் கூறியது:
மரியாதை, நல்ல நடத்தை ஆகிய பண்புகளை நாம் அனைவரும் பள்ளியிலேயே கற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் இவற்றைப் பற்றித் தெரியாத ராகுல் காந்தி மீண்டும் பள்ளிக்குச் சென்று இவற்றை கற்று வர வேண்டும்.

குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது. வளர்ச்சியும் அமைதியும் ஒருங்கே அமைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி