திரையுலகம்,முதன்மை செய்திகள் எந்திரன் வெற்றி… இறுதி செய்யப்பட்டது த்ரி இடியட்ஸ் வெளிநாட்டுக்கு பறக்கிறார் ஷங்கர்

எந்திரன் வெற்றி… இறுதி செய்யப்பட்டது த்ரி இடியட்ஸ் வெளிநாட்டுக்கு பறக்கிறார் ஷங்கர்

Director_Shankar

எந்திரன் ஹிட்! இந்த சந்தோஷ மனசோடு வெளிநாட்டுக்கு கிளம்ப போகிறார் ஷங்கர். கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்திரனில் மூழ்கியிருந்த ஷங்கர், குடும்பம், உடல் நலம் என்று எதையும் கவனிக்காமலே இருந்தாராம். வழக்கமாக ஒரு படம் முடிந்ததும் அடுத்தப்பட இடைவெளியில் குடும்பத்தோடு வெளிநாடு செல்வது அவரது வழக்கம். இந்த முறையும் அதைதான் செய்யப் போகிறார். ஆனால் முன்னிலும் சந்தோஷமாக.

அவர் திரும்பி வந்து சுடசுட த்ரி இடியட்ஸ் படத்தை துவங்குவாராம். இத்தனை நாட்களாக இதில் யாரை யாரையெல்லாம் நடிக்க வைப்பது என்ற குழப்பம் எழுந்தது. முதல் ஆளாக விஜய் ஓ.கே. மற்ற கேரக்டர்களில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதிலும் தெளிவில்லாத நிலையே நீடித்துக் கொண்டிருந்தது. இப்போது அதற்கும் இறுதி வடிவம் கொடுத்துவிட்டார் ஷங்கர்.

விஜய், ஜீவா, சித்தார்த் ஆகிய மூவர்தான் ஷங்கரின் அடுத்தப்பட ஹீரோக்கள். இதை தெளிவாகவே முடிவு செய்துவிட்ட ஷங்கர் படம் தொடர்பான பிற வேலைகளை சிலரிடம் பிரித்துக் கொடுத்துவிட்டாராம். அவர் சென்னை வந்தபின் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிவருமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி