திரையுலகம்,முதன்மை செய்திகள் எந்திரன் சன் வழக்கு…

எந்திரன் சன் வழக்கு…

enthiran___the-robot

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள எந்திரன் படம் குறித்த தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி, பிரபலமான தமிழ் நாளிதழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் .

இந்த நாளிதழ்கள் படம் பற்றிய கருத்தைச் சொல்லாமல், படத்தை தனிப்பட முறையில் தாக்கி வருவதாகவும், மக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும்படி தூண்டும் விதத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளதாகவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சென்னை நகரில் இன்று வரை 42 அரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது எந்திரன். ஆனால் அந்த ஆங்கில நாளிதழ், படம் வெளியான மூன்றாவது நாளே அதாவது ஞாயிற்றுக்கிழமை கூட்டம் குறைந்தது என்றும், திரையரங்குகளில் காட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் பொய்ச் செய்தி வெளியிட்டது. இது பொறாமையால் வெளியிடப்பட்ட செய்தியே.

குறிப்பிட்ட அந்த தமிழ் நாளிதழ், படத்துக்கான மார்க்கெட்டிங் உள்ளிட்ட பலவற்றை குறை சொல்லியிருந்தது. உண்மையில் அனைத்தையும் சட்டப்படியும் திரையுலக விதிகளுக்கு உள்ளிட்டும்தான் நாங்கள் செய்திருக்கிறோம், என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இரு நாளிதழ்களும் வெளியிட்ட எந்திரன் தொடர்பான செய்திகள் பொய்யே என்றும், இந்தச் செய்திகள் மற்றும் வரம்பு மீறிய தாக்குதல் கட்டுரைக்கு உரிய மறுப்பு வெளியிட்டு, மன்னிப்பு கோராவிட்டால் நீதிமன்ற நடவடிக்கையை நாட வேண்டியிருக்கும் என்றும் அந்த நோட்டீஸில் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி