அரசியல்,முதன்மை செய்திகள் விரைவில் சீனாவை ஓரங்கட்டிவிடும் இந்தியா

விரைவில் சீனாவை ஓரங்கட்டிவிடும் இந்தியா

chinaindiaflag

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரைவில் சீனாவை விட மேம்பட்ட நிலையை இந்தியா அடையும், என தி எகானமிஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள எகானமிஸ்ட் இதழில் ‘How India’s growth will outpace China’s’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது. அதில் பொருளாதார அதிசயங்கள் புரியும் சக்தியாக இந்தியா எப்படி மாறியது என்று அலசப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டுமானால் கேள்விக் குறியாக இருக்கலாம், ஆனால் அங்குள்ள தனியார் நிறுவனங்கள் மிகவும் வலுவானவை என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “எத்தனை சவால்கள் வந்தாலும் அதுபற்றி பெரிதாக இந்தியா அலட்டிக் கொள்வதில்லை. உதாரணத்துக்கு, சமீபத்திய காமன்வெல்த் போட்டிகள் பற்றி எத்தனையோ மோசமான செய்திகள் வந்தன. ஆனால் இறுதியில் அவற்றைப் பொய்யாக்கி, சர்வதேசத் தரத்தில் சற்றும் குறைவில்லாமல் போட்டிகளை நடத்துகிறது.. அதுதான் இந்தியாவின் ஸ்பெஷல்.

இந்த ஆண்டு நிச்சயம் 8.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். இதற்கு இந்தியாவின் மக்களாட்சி முறையும் கூட பெருமளவு உதவும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை விட சீனா பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் 2013-ல் சீனாவை விட பெரிய, வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும், என்கிறது அக்கட்டுரை.

குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தில் தீவிரமாக உள்ள சீனாவில், உழைக்கும் மக்கள் தொகை விரைவிலேயே ஓய்வு பெறும் வயதை அடைந்துவிடும் என்றும், அதே நேரம், இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் அதன் உச்சகட்ட வீரியத்தில் இருக்கும் என்றும் இக்கட்டுரை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

சாப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு சீனாவை விட இந்தியாதான் பெட்டர் சாய்ஸ் என்று கூறியுள்ளது எகானமிஸ்ட்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி