அரசியல்,முதன்மை செய்திகள் வலைவீசத் தொடங்கி விட்ட ஒபாமா நிர்வாகம்…

வலைவீசத் தொடங்கி விட்ட ஒபாமா நிர்வாகம்…

obama

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலான உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பராக் ஒபாமாவின் இந்தச் செய்தியை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டன், அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் றெபேட் ஓ பிளேக் ஊடாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உதவி இராஜாங்கச் செயலாளர் றெபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளதாவது,கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இதயசுத்தியுடன் தமது விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதையே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகக் குழு விரும்புகின்றது.

சிறீலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் களையப்படுவதற்கு, முழுமையான விசாரணைகள் இடமளிக்கலாம். இந்த நிலையில் இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி