திரையுலகம் தமிழில் டப்பிங் செய்யப்படும் மல்லிகா ஷெராவத் படம்

தமிழில் டப்பிங் செய்யப்படும் மல்லிகா ஷெராவத் படம்

Mallika

கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் நடித்துள்ள ஹாலிவுட் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் ஜெனிபர் சேம்பர் லிஞ்ச் இயக்கியுள்ள படம் ஹிஸ். நம்ம ஊர் கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இதை, தமிழில் ஸ்…ஸ்…ஸ் என்ற பெயரில் டப்பிங் செய்து ஸ்ரீ திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது.

இந்தி, தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாகும் இந்த படத்தில், பாலிவுட் நடிகர் இர்பான் கான், நடிகை திவ்யா தத்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.

மனித உருவம் எடுக்கும் பாம்பு பற்றிய கதை என்பதால் அதன் சத்தத்தையே தலைப்பாக்கி இருக்கிறார்கள்.

அக்டோபர் 22-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மல்லிகா ஷெராவத் ரசிகர்களுக்கு விருந்துதான்…!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி