நடிகை அசினுக்கு கருப்புக்கொடி : விஜய் பட ஷூட்டிங்கில் பரபரப்பு…

விளம்பரங்கள்

asin

ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததால் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த்திரைப்பட நடிகர் சங்கம் அறிவித்திருந்தது.
ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை.
இதனால் அசினுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவரி இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது.
ஆனால் விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார். எந்த எதிர்ப்பும் இல்லை.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார்.
இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடந்துவருகிறது.

நடிகர் விஜய்-அசின் நடிக்கும் இப்படத்தில் வடிவேல் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
நேற்று நடிகர் விஜய்-அசின் நடித்த காட்சிகள் மேட்டுப் பாளையத்தில் படமாக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் இந்த படப்பிடிப்பு நடந்தது. விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர் களைப்பார்த்து கும்பிட்டபடி விஜய் வந்தார்.
படப்பிடிப்பில் கலந்து கொள்ள அசின் மேட்டுப்பாளையம் வந்தார். நடிகர் வடிவேலு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்கிறது.

ரயில் நிலையம், பிளாக் தண்டர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. காவலன் படத்தை சித்திக் டைரக்டு செய்கிறார்.
அசின் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்ததுட். இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
’அசின் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கக்கூடாது’ என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: