எந்திரன் விளைவு – ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? தீபிகா படுகோனே ஏக்கம்

விளம்பரங்கள்

enthiran

சென்னை மாநகரை இரண்டு காரணங்களுக்காக எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒன்று மெரினா கடற்கரை… இன்னொரு சூப்பர் ஸ்டார் ரஜினி இங்கிருப்பதால், என்கிறார் நடிகை தீபிகா படுகோன்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் தீபிகா படுகோன் , சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. பெண்கள் வைஷ்ணவா கல்லூரியில் மாணவிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு வந்த அவர், நிருபர்களிடம் பேசினார்.

“சென்னை என்னால் மறக்க முடியாத இடம். இங்கு வரும்போது பழைய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன. மாடலிங்கில் இருந்தபோது பலமுறை வந்து இருக்கிறேன். இந்த நகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரணம் ஒன்று மெரினா கடற்கரை.

இன்னொரு முக்கிய காரணம், ரஜினி சார் இங்கு இருப்பதுதான்.அவரை எனக்கு எந்தளவு பிடிக்கும் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் ஒரு நடிகை என்பது அப்புறம்தான். முதலில் அவரது ரசிகை. ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை.  நான் சினிமாவுக்கு வந்து கொஞ்ச காலம்தான் ஆகிறது. இதற்குள் வித்தியாசமாக நிறைய கேரக்டர்களில் நடித்துவிட்டேன். ரஜினி சாருடன் நடித்தால் என் நடிப்பு வாழ்க்கைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தமாதிரி.

ஐ.பி.எல். கிரிக்கெட் அணியை நான் வாங்கப்போவதாக வதந்திகள் பரவியுள்ளன. அதில் உண்மை இல்லை. எனக்கு விளையாட்டு பிடிக்கும் அவ்வளவுதான்” என்றார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: