நடிகர் விஜய் – அஜித் சேரும் புதிய படம்

விளம்பரங்கள்

ajith

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாறிவரும் சினிமா பிரபலங்கள் பட்டியல் நீண்டுகொண்டு வருகிறது. தற்போது கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தயாரிப்பாளர்களாக மாறியுள்ளனர். ஆர்யாகூட தனது தயாரிப்பில் ‘படித்துரை’ என்னும் படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

இந்த வரிசையில் ஹைலைட்டாக ஒரு முக்கியமான ‘தல’ தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளது.

சினிமாவில் தனித் தன்மையுடனும், தனி தன்மையுடனும் ( எந்தவித பெரிய சினிமா ஆதரவும் இல்லாமல்) முன்னணி நடிகனாக (’தல’யாக) விளங்குகிறார் அஜித். தனது 50 வது படத்தின் மும்முரத்தில் இருக்கும் இந்த நேரத்திலும் ஒரு படத்தை தயாரிக்க முடிவெடித்துள்ளாராம்.

“ நான் சினிமாவை நேசிக்கும் கலைஞன். அதனால்தான் சினிமாவில் சம்பாதித்ததை, சினிமாவின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்துகிறேன்” என்பார் கமல்.

அதே பாணியில், தற்போது அஜித் தயா‌ரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் “குட்வில் எ‌ண்டர்டெய்ன்மெண்ட்”.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார் அஜித். தற்போது தனது நிறுவனத்திற்காக கதை கேட்டும் வருகிறாராம்.

இது பற்றி குறிப்பிடும் போது ‘எனது நண்பர்களுக்கும் ‘குட்வில்’லில் வாய்ப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார் அஜீத். அப்போது அவரிடம், விஜய்யை வைத்து படம் எடுப்பீர்களா…? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நிச்சயமாக… விஜய் எனது சிறந்த நண்பர். அவரை வைத்து படம் பண்ணும் எண்ணம் எனக்கு உண்டு” என நட்பின் மிகுதியுடன் பதிலளித்தார் அஜீத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: