கடன்கார இந்தியர்கள்….

விளம்பரங்கள்

indianflag

இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ^50,600 கோடி கடன் வழங்கலாமா என்பது குறித்து உலக வங்கி ஆலோசித்து வருவதாக இந்திய வங்கிகளுக்கான தலைவர் ராபெர்ட்டோ ஜாகா தெரிவித்தார். டெல்லியில் முதலீடு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட வங்கிகளுக்கான இந்திய தலைவர் ஜாகா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கி 69,000 கோடி முதல் ^92,000 கோடி வரை கடன் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கியிடம் இந்திய அரசு ^50,600 கோடி கேட்டு இருப்பதாக அரசு தெரிவித்திருந்து. இதே அளவிலான கடன் தொகையை மின்சார வசதி மேம்பாட்டிற்கு உலக வங்கியிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2012&2017ம் ஆண்டிற்கான ஐந்தாண்டு திட்டத்தில் உள்கட்டமைப்பிற்கு ^45 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. உள்கட்டமைப்பு பணியை துரிதப்படுத்த மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கையை முன் எப்போதும் பார்த்தது இல்லை. இது ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களில் மட்டும் கண்டறியப்படாத முதலீட்டு வளமாக ^2,76,000 கோடி உள்ளது. உலக வங்கி கடன் வழங்குவதில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. இவ்வாறு ராபெர்ட்டோ கூறினார்.

இந்தியாவின் கடன்:34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடி

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பொது கடன் ரூ.34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 115 கோடியே 40 லட்சம் ஆகும். இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதவாக்கில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் சராசரி கடன் ரூ.30 ஆயிரம் ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் நிறுவன கணக்குப்படி, ஒரு இந்தியனின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38 ஆயிரம் மட்டுமே. எனவே, ஒவ்வொரு இந்தியனுக்கும் அவனது 10 மாத சம்பளத்தொகை, கடனாக உள்ளது.

டெல்லி: உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 900 கோடி டாலர் (அதாவது ரூ. 41,500 கோடி) ஆகும். இத்தொகை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

உலக வங்கி கடந்த ஆண்டு 220 கோடி டாலர் கடனுதவி அளித்தது.
2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான்.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது.

உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவீதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவீதமாகும்.
ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர். வருகிற நிதியாண்டில் மேலும் 0.04 பில்லியன் டாலர் கடனை இந்தியாவுக்குத் தரவுள்ளது உலக வங்கி

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: