திரையுலகம்,முதன்மை செய்திகள் எந்திரன் – சிறப்பு விமர்சனம்

எந்திரன் – சிறப்பு விமர்சனம்

Endhiran

ஆக்‌க சக்‌தி‌க்‌கா‌க பயன்‌ படும்‌ ரோ‌போ‌வை‌, அழி‌வு‌க்‌கு பயன்‌ படுத்‌த நி‌னை‌க்‌கி‌றா‌ர்‌ வி‌ல்‌லன்‌. அதி‌லி‌ருந்‌து அதை‌ வி‌டுவி‌த்‌து இந்‌த நா‌ட்‌டை‌ எப்‌படி‌ ரஜி‌னி‌ கா‌ப்‌பா‌ற்‌றுகி‌றா‌ர்‌ என்‌பது படம்‌. ‌
ரஜி‌னி‌யி‌ன்‌ ஸ்‌டை‌ல்‌, ஷங்‌கரி‌ன்‌ பி‌ரமா‌ண்‌டம்‌ இரண்‌டும்‌ கை‌ கோ‌ர்‌த்‌து பி‌ரமி‌க்‌க வை‌க்‌கும்‌ படமா‌க,சி‌ரி‌த்‌து கொ‌ண்‌டா‌டும்‌ படமா‌க வந்‌தி‌ருக்‌கி‌றது எந்‌தி‌ரன்‌
இந்‌தி‌ய ரா‌ணுவத்‌துக்‌கு உதவு‌வதற்‌கா‌க ஒரு ரோ‌போ‌வை (ரஜி‌னி‌) ‌ உருவா‌க்‌குகி‌றா‌ர் வி‌ஞ்‌ஞா‌னி‌ வசீ‌‌கரன்‌(ரஜி‌னி‌)‌. நூ‌று வீ‌‌ரர்‌கள்‌ செ‌ய்‌ய வே‌ண்‌டி‌யதை‌ அந்‌த ஒரு ரோ‌போ‌ செ‌ய்‌யு‌ம்‌ ஆற்‌றல்‌ கொ‌ண்‌டது. இருந்‌தா‌லும்‌ அதற்‌கு மனி‌தர்‌கள்‌ போ‌ல யோசி‌‌த்‌து செ‌ய்‌யக்‌ கூடி‌ய உணர்‌வு‌ இல்‌லா‌ததா‌ல்‌ ரி‌ஜக்‌ட்‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்‌.
அதனா‌ல்‌ அதற்‌கு கோ‌பம்‌, பா‌சம்‌, வே‌தனை, கா‌தல் ‌ என எல்‌லா‌ வகை‌ உணர்‌வு‌களை‌யு‌ம்‌ ஏற்‌றுகி‌றா‌ர்‌ வசீ‌கரன்‌. அதை‌ உணரும்‌ ரோ‌போ‌, வசீ‌கரனி‌ன்‌ கா‌தலி‌ மீ‌து கா‌தல்‌ கொ‌ள்‌கி‌றது. ஒரு மெ‌ஷி‌னை‌ எந்‌த பெ‌ண்‌ணும்‌ கா‌தலி‌க்‌க மா‌ட்‌டா‌ள்‌ என்‌று எவ்‌வளவோ‌ எடுத்‌து சொ‌ல்‌லி‌யு‌ம்‌ அதனை‌ ஏற்‌‌க மறுக்‌கும்‌ ரோ‌போ‌, வசீ‌கரனி‌ன்‌ முயற்‌சி‌களை‌ தோ‌ல்‌வி‌யடை‌க்‌க வை‌ப்‌பதோ‌டு, கா‌தலி‌யு‌டன்‌ வா‌ழவே‌ ஆசை‌ப்‌படுகி‌றது.
அதனா‌ல்‌ கோ‌பமா‌கும்‌ வசீ‌‌கரன்‌, ரோ‌போ‌வை‌ தனி‌தனி‌யா‌க உடை‌த்‌து குப்‌பை‌யி‌ல்‌ தூ‌க்‌கி‌ போ‌டுகி‌றா‌ர்‌. அதை‌ தூ‌க்‌கி‌க்‌ செ‌ன்‌று அழி‌வு‌ வே‌லை‌க்‌கு பயன்‌ படுத்‌த முயற்‌சி‌க்‌கி‌றா‌ர் வி‌ல்‌லன்‌ டோ‌னி‌ செ‌ங்‌. ஆனா‌ல்‌ அது நி‌றை‌ய ரோ‌போ‌க்‌களை‌ உருவா‌க்‌கி‌, ஐஸ்‌வர்‌யா‌வை‌ தூ‌க்‌கி‌ வந்‌து பா‌துகா‌ப்‌பதோ‌டு, அவளுக்‌கு வா‌ரி‌சை‌யு‌ம்‌ உருவா‌க்‌க முயல்‌கி‌றது. அதை‌ தடுத்‌து, அதன்‌ அழி‌வு‌ சக்‌தி‌யை‌ அதனி‌டம்‌ இருந்‌து வி‌ளக்‌க வசீ‌கரன்‌ போ‌ரா‌டுவததா‌ன்‌ படம்‌.
முதல்‌ பா‌தி‌யி‌ல்‌ கண்‌டுபி‌டி‌ப்‌பு‌, கா‌மெ‌டி‌, கா‌தல்,‌ ஜா‌லி‌ என படம்‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ சி‌ரி‌ப்‌பு‌ம்‌ கொ‌ண்‌டா‌ட்‌டமுமா‌க பா‌ர்‌க்‌க முடி‌‌கி‌றது. இரண்‌டா‌வது பா‌தி‌யி‌ல்‌ இரா‌ம.நா‌ரா‌யணன்‌ படம்‌ மா‌தி‌ரி கி‌ரா‌பி‌க்‌ஸ்‌ கா‌ட்‌சி‌களை‌ வை‌த்‌தக்‌ கொ‌ண்‌டு மி‌ரட்‌டுவதா‌ல்‌ நா‌மும்‌ எந்‌தி‌ரமா‌க பா‌ர்‌க்‌க வே‌ண்‌டி‌யருக்‌கி‌றது. அதி‌ல்‌ ரஜி‌னி‌யி‌ன்‌ வி‌ல்‌லத்‌தனம்‌ கொ‌ஞ்‌சம்‌ ஆறுதல்‌.
படத்‌தி‌ன்‌ ஆரம்‌பத்‌தி‌லி‌ருந்‌தே‌ ரசி‌கர்‌கள்‌ ஒவ்‌வொ‌ரு கா‌ட்‌சி‌யை‌யு‌ம்‌ பெ‌ரி‌தும்‌ எதி‌ர்‌பா‌ர்‌ப்‌போ‌டு வரவே‌ற்‌கி‌றா‌ர்‌கள்‌. அவர்‌களது எதி‌ர்‌பா‌ர்‌பை‌ ஒவ்‌வொ‌ரு கா‌ட்‌சி‌யி‌லும்‌ அதி‌கரி‌க்‌க வை‌க்‌கும்‌ இயக்‌குநர்‌ ஷங்‌கர்,‌ கடை‌சி‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ சுவரா‌ஸ்‌யம்‌ இல்‌லா‌மல்‌ வி‌த்‌தை‌ கா‌ட்‌டும்‌ போ‌து சோ‌ர்‌ந்‌து போ‌கி‌ற அனுபவத்‌தை‌ தந்‌து வி‌டுகி‌றா‌ர்‌. பூ‌மி‌யை‌ பொ‌ளந்‌து கொ‌ண்‌டு வருகி‌ற கா‌ட்‌சி‌யு‌ம்‌ பா‌ம்‌பா‌க மா‌றி‌ கா‌ர்‌களை‌ வி‌ழுங்‌குகி‌ற கா‌ட்‌சி‌யெ‌ல்‌லா‌ம்‌, ஆத்‌தா‌ அவதா‌ரம்‌ எடுத்‌து வி‌ளை‌யா‌ட்‌டு கா‌ட்‌டுவது போ‌ல இருக்‌கி‌றது. கா‌மெ‌டி‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ பி‌தா‌மகன்‌ படத்தி‌ல்‌ வி‌க்‌ரம்‌ நடி‌த்‌த சி‌த்‌தன்‌ பா‌த்‌தி‌ரத்‌தை‌ ரோ‌போ‌ பா‌த்‌தி‌ரம் ஞா‌பகப்‌படுத்‌துவதை‌ தவி‌ர்‌க்‌க முடி‌யவி‌ல்‌லை‌.
வசகீ‌ரன்‌, ரோ‌போ‌ என இரண்‌டு வே‌டத்‌தி‌ல்‌ கலக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ ரஜி‌னி‌. இரண்‌டி‌லும்‌ அவரது பர்‌பா‌மன்‌ஸ்‌ எக்‌சலண்‌‌ட். வா‌வ்‌ என பல இடங்‌களி‌ல்‌ மனதை‌ அள்‌ளுகி‌றா‌ர்‌. அவரது ஸ்‌டை‌லி‌ல்‌ ரோ‌போ பே‌சுவது,‌ நடப்‌பது, நி‌ற்‌பது, ஆடுவது, சண்‌டை‌யி‌டுவது என பல கா‌ட்‌சி‌கள்‌ கை‌ தட்‌டல்‌களை‌ அள்‌ளுகி‌றது. ரெ‌மோ‌ மா‌தி‌ரி‌ ரோ‌போ‌ கா‌தல்‌ ரொ‌மா‌ன்‌ஸ்‌ சே‌ட்‌டை‌கள்‌ செ‌ம ரகளை‌.ரஜி‌னி‌ ரசி‌கர்‌களுக்‌கு அவரது கா‌ட்‌சி‌கள்‌ செ‌ம வி‌ருந்‌து.
வசன கா‌ட்‌சி‌யி‌லும்‌, பா‌டல் ‌கா‌ட்‌சி‌யி‌லும்‌ அழகு தே‌வதை‌யா‌க ஜொ‌லி‌க்‌கி‌றா‌ர்‌ ஐஸ்‌வர்‌யா‌ரா‌ய்‌. கோ‌மா‌ளி‌யா‌க வந்‌து ரோ‌போ‌வி‌டம்‌ செ‌ருப்‌படி‌வரை‌ வா‌ங்‌கி‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌க உதவு‌கி‌ன்‌றனர்‌ சந்‌தா‌னம்‌, கருணா‌ஸ்‌ கூட்‌டணி‌. வந்‌துட்‌டா‌னயா‌ பா‌வி‌ என்‌று தனது நடி‌ப்பா‌ல்‌ சொ‌ல்‌ல வை‌க்‌கி‌றா‌ர்‌ டோ‌னி‌ செ‌ங்‌.
சா‌பு‌சி‌ரி‌லி‌ன்‌ பி‌ரமா‌ண்‌ட செ‌ட்‌ வா‌வ்‌. ஆர்‌.ரத்‌ன‌வே‌லுவி‌ன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ அபா‌ரம் என்‌றா‌ல்‌ ஆண்‌டனி‌‌யி‌ன்‌ படத்‌ தொ‌குப்‌பு படுவே‌கம்‌. பா‌டல்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ மட்‌டுமல்‌லா‌து பி‌ன்‌னணி‌ இசை‌யி‌லும்‌ கலக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌ ஆஸ்‌கா‌ர்‌ நா‌யகன்‌ ஏ.ஆர்‌.ரகுமா‌ன்‌. உலக அளவி‌ல்‌ தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ வி‌யா‌பா‌ரத்‌தை‌ தூ‌க்‌கி‌ நி‌றுத்‌தி‌யி‌ருக்‌கிறது சன்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ நி‌றுவனம்‌. படத்‌தி‌ற்‌கு‌ தா‌ரா‌ளமா‌க செ‌லவு‌ செ‌ய்‌தி‌ருப்‌பது தெ‌ரி‌கி‌றது. ‌.
ஒரு சி‌ன்‌ன கதை‌யை‌ வை‌த்‌தக்‌கொ‌ண்‌டு செ‌ம சி‌ரி‌ப்‌பு‌, செ‌ம மி‌ரட்‌டல்‌ என படத்‌தை‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ ஷங்‌கர்‌. பல கா‌ட்‌சி‌களி‌ல்‌ வி‌யப்‌பை‌ ஏற்‌படுத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவரது மூ‌ளை‌ சுரப்‌பி‌யை‌ பா‌ர்‌த்‌து வி‌யக்‌க தோ‌ன்‌றுகி‌றது. அவரது தி‌றமை‌ பல இடங்‌களி‌ல்‌ பளி‌ச்‌சி‌டுகி‌றது. உதவு‌ம்‌ கரங்‌கள்‌, குழந்‌தை‌ பி‌ரசவம்‌, தீ‌யி‌லி‌ருந்‌து மக்‌களை‌ கா‌ப்‌பா‌ற்‌றுவது, பா‌டல்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ பி‌ரமா‌ண்‌ட செ‌ட்‌ என அவரது வழக்‌கமா‌ன சம்‌பவங்‌களும்‌ மி‌ஸ்‌ ஆகவி‌ல்‌லை‌.
எந்‌தி‌ரன்‌ – வி‌யப்‌பு‌ – சி‌ரி‌ப்‌பு‌

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி