அரசியல்,முதன்மை செய்திகள் பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் – நெடுமாறன்

பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் – நெடுமாறன்

prabha

மீண்டும் ஈழத்தில் போர் வரும். அந்தப் போருக்கு பிரபாகரன் தலைமை ஏற்பார். அந்தப் போருக்காக அவர் தயாராகி வருகிறார் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன். தூத்துக்குடியில் நடந்த தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு நெடுமாறன் பேசுகையில்,

1983ம் ஆண்டு முதல் சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊனமாகியுள்ளனர். மீனவர்களின் படகுகள் மற்றும் சொத்துக்களை கடலில் மூழ்கடித்துள்ளனர். பாதிக்கப்படும் மீனவர்கள் தமிழர்கள் என்பதால் இந்திய கடற்படையும் அக்கறை காட்டுவதில்லை. நமது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கின்றனர். அதனால் எதுவும் செய்ய முடியாது என்கிறார்.

சிங்கள கடற்படையினர் ராமேசுவரம் அருகில் உள்ள மீனவர் கிராமத்தை தீயிட்டுக் கொளுத்தினர். மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டு கொள்வதில்லை. எனவே, தமிழக மீனவர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை தங்கள் பாதுகாப்புக்காக வைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மீனவர்கள் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சனை.

மீண்டும் ஈழப்போர் வரும். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாக, பத்திரமாக உள்ளார். அவர் அடுத்த கட்ட ஈழப்போருக்கு ஆயத்தமாகி வருகிறார் என்றார் நெடுமாறன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி