ரூ. 12,000 முதல் 70,000 வரை விழாக்கால தள்ளுபடி தரும் ஜெனரல் மோட்டார்ஸ்

விளம்பரங்கள்

பண்டிகைக் கால சிறப்புத் தள்ளுபடியை அறிவித்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். ரூ. 12,000 முதல் ரூ. 70,000 வரையிலான தள்ளுபடியை அது அறி்வித்துள்ளது.

இந்த சிறப்புத் தள்ளுபடி ஜெனரல் மோட்டார்ஸின் அனைத்து வகை கார்களுக்கும் பொருந்தும். தீபாவளி மற்றும் நவராத்திரியையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சலுகை இது.

மேலும், இந்த பண்டிக்கைக் காலத்தையொட்டி தனது புதிய தயாரிப்பு ஆலையையும் அது திறக்கவுள்ளது. புனே அருகே தலேகான் என்ற இடத்தில் 230 மில்லியன் டாலர் செலவில் இந்த ஆலையை நிர்மானித்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். நவம்பர் 12ம் தேதி இது திறக்கப்படுகிறது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸின் கார்ப்பரேட் விவகாரப் பிரிவு துணைத் தலைவர் பாலேந்திரன் கூறுகையில், நாங்கள் கார்களின் விலையை உயர்த்தவில்லை. மாறாக தள்ளுபடியை அறிவித்துள்ளோம். குறைந்தது ரூ. 12,000 முதல் ரூ. 70,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளோம்.

பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விலையை உயர்த்தி வருகின்றனர். இருப்பினும் அவசரப்பட்டு நாங்கள் விலையை உயர்த்த விரும்பவில்லை. இதில் அவசரம் காட்ட விரும்பவில்லை. குறிப்பாக இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் கார்கள் என்ற இலக்கை நோக்கி நடைபோட்டு வரும் நிலையில் விலை உயர்வு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை என்றார் அவர்.

இதற்கிடையே, இந்தியாவில் உள்ள தனது இரு தயாரிப்பு ஆலைகளிலும் 2வது ஷிப்ட் முறையை அமலாக்க தீவிரமாக உள்ளதாம் ஜெனரல் மோட்டார்ஸ். இதந் மூலம் கார்களின் தயாரிப்பை இரண்டு மடங்காக அதிகரிக்க அது திட்டமிட்டுள்ளது

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: