கமல் படத்தில் 'களவாணி' ஓவியா!

விளம்பரங்கள்

helen

களவாணி படத்தில் தனது அழகு மற்றும் துடிப்பான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தைக் களவாடிய ஓவியா, கமல் ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் கடைசி காட்சியையே ஓவியா தோன்றுவது போலத்தான் எடுத்து முடித்துள்ளாராம் கே எஸ் ரவிக்குமார்.

ஓவியாவுக்கு என்ன ரோல்?

கண்டிப்பாக கமலுக்கு ஜோடியாக அவரைப் போட முடியாது என்பதால், மாதவனின் ஜோடியாக நடிக்க வைத்துள்ளனர். “கமல் சார் படத்தில் தலை காட்டுவதே பெருமைக்குரிய விஷயம்தானே”, என்ற வழக்கமான பல்லவியையே நம்மிடமும் பாடினார் ஓவியா.

இந்தப்படத்தில் இன்னொரு நடிகர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவர், கமல் மகளுக்கு நாயகனாகிவிட்ட சூர்யா . 7-ம் அறிவு படத்தின் இரண்டு நாள் கேப்பில் இந்த ரோலை முடித்துக் கொடுத்தாராம்.

“இது மட்டுமல்ல… இன்னும் சில ஆச்சர்யங்களும் படத்தில் உள்ளன” என்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

வேற என்னவாக இருக்கும்? மேலும் சில முன்னணி நடிகர்களும் கெஸ்ட் ரோலில் வரப்போகிறார்களோ!

நன்றி : http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/09/28-kalavani-oviya-kamal-film.html

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: