மங்காத்தா-அதிரடி அறிவிப்பு

விளம்பரங்கள்

அஜித் நடிக்கும் மங்காத்தா படத்தின் படபிடிப்பு தொடங்குமுன்பே அதைப் பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பூச்சாண்டி காட்டியது போதும் என்று நினைத்தாரோஎன்னவோ, மங்காத்தா படப்பிடிப்பை அடுத்த மாதம் 20-ம் தேதி முதல் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தல அஜீத் புது கெட்அப்பில் வருகிறாராம். அதை பார்க்க வேண்டுமென்றால் பட்பிடிப்பு வரை காத்திருக்க வேண்டும் என்று வெங்கட் பிரபு சஸ்பென்ஸ் வைக்கிறார்.

மேலும், இது எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியும் கிடையாது. இது சொந்தமாக எழுதிய சுத்தமான ஒரிஜினல் அக்மார்க் கதை. இதன் படப்பிடிப்பு பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடக்கவிருக்கிறது என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

மங்காத்தாவில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா, லட்சுமி ராய், வேதிகா என்று மூன்று பேர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி :http://narumugai.com/?p=13502

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: