எச்சரிக்கை…

விளம்பரங்கள்

இனியதமிழ் திரட்டி…

சென்ற வாரம் இலங்கையில் அதன் அரசியலமைப்பு சட்டத்தில் அதிபருக்கு சாதகமாக சில சட்ட திருத்தங்களை செய்துள்ளனர். இது ஒன்றும் புதிதில்லை ஏற்கனவே பலமுறை இப்படி நடந்துள்ளது ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த புதிய சட்ட திருத்தத்தை பற்றி யாருமே வாய் திறக்காத நிலையில் அமெரிக்கர்கள் மட்டும் இது ஜனநாயகத்தை பாதிக்கும் என்று குரல் எழுப்பி உள்ளனர். இந்த விசயமும் புதிதல்ல அவர்கள் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள்…அவர்கள் இன்றி இன்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் யார் ஜனநாயகத்தை கா(கை)ப்பற்றி இருக்க முடியும். அங்கெல்லாம் நினைத்ததை முடித்தவர்கள் இலங்கையை பார்த்து எப்படி அரசியலமைப்பை மாற்றலாம் என்று குரல் எழுப்ப வந்ததே கோபம் நம் அண்டை நாட்டுக்கு கடுமையாக கண்டன குரல் எழுப்பியதோடு அல்லாமல் தமது உள்நாட்டு விசயத்தில் தலையிட அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் கிடையாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தாங்க எதிர்ப்பு அரசியல் என்பது…இந்தியாவ விடுங்க இலங்கை சீனாவோட எந்த அளவிற்கு நெருக்கம் என்பது இது ஒரு அளவுகோள்… யாரோ என்னமோ செய்கிறார்கள் என்று நம்மால் சும்மா இருக்க முடியாது அதுக்கு இரண்டு காரணம் ஒன்று தெரியத்தனமா தமிழர்களாய் பிறந்து விட்டோம். இரண்டாவது பிரச்சனை இலங்கையோடு முடிய போவது இல்லை கண்டிப்பாய் ஒரு நாள் தமிழ் நாட்டையும் பாதிக்கும். சிங்களவனிடம் ஈழத் தமிழனும்…இந்தியன் என்ற போர்வையில் தமிழ் நாட்டு தமிழன் வடக்கத்தியர்களிடமும் மோசமாக மாட்டிக்கொண்டுள்ளோம்.

தமிழர்கள் என்றாலே வஞ்சம் வைத்து கருவறுக்கும் ஒரு கூட்டம் எல்லா இடங்களிலும் இருந்து கொண்டிருகிறது. இனியும் தமிழர்கள் விழிக்காமல் இருந்தால் “தமிழன் என்றோரு இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு!” என்ற பதங்கள் இருந்த இடம் தெரியாமல் காணமல் போய்விடும்.

ஈழத்தமிழனை எச்சரித்தும் அவர்கள் ஒன்று படாததால் இன்று அடிமை வாழ்கை வாழ வேண்டி இருக்கிறது. தமிழக தமிழனை எச்சரிக்கும் காலம் இது…என்ன நடக்கிறது என்று பார்போம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: