கூட்டம் கூட்டி அராஜகம்…

விளம்பரங்கள்

இனியதமிழ் திரட்டி…

நேற்றைய செய்தியில் ஒரு பள்ளி மாணவன் இறந்ததிற்கு ஒரு ஊரே கூடி ஒரு பள்ளிக்கூடத்திற்கு தீ வைத்துள்ளது. உயிரிளப்பு என்பது தாங்க முடியாத ஒன்று தான் அதற்காக ஊரையே கூட்டிக் கொண்டு ஒரு பள்ளி கூடத்தையே அதுவும் மாணவ மாணவிகள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தீ வைப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயல்.

ஏன் இந்த கொடூரமான செயல்கள் கண்மூடித்தனமாக நடைபெறுகின்றன. சமீபத்தில் தான் தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்தது படு பாதகமான செயல் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்டனங்களை தெரிவிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் பொழுது இது போன்ற அராஜகங்கள்…வன்முறைகள் எந்த விதத்திலும் தீர்வாகாது. ஏதேனும் அசம்பாவிதமாக நடந்திருந்தால் பல மாணவ செல்வங்கள் தீயில் கருகி இருந்தால் என்ன ஆகியிருக்கும் எண்ணிப் பார்க்க வேண்டும் வன்முறையில் ஈடுபடுவோர்.

அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நபருக்கு கூடவா செய்வது தவறு என்று தெரியவில்லை…வெட்கம்….

இனியதமிழ் ஆசிரியர் குழு

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: